நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க அரசு மானியம் - மதுரை மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், கறிக்கோழி, முட்டைக் கோழி, நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு, கொட்டகைகள் அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 33 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், நாட்டுக் கோழிகளை ஆண்டு முழுவதும் விவசாயிகள் வளர்க்க ஊக்கப்படுத்தும் பொருட்டு, 2ஆம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் தமிழக அரசு சார்பில் 50 சதவீதம் ஊக்கத்தொகை 3,125 ரூபாயும், 3ஆம் தொகுப்பு கோழிக் குஞ்சுகளை வாங்கும் செலவில் 30 சதவீதம் ஊக்கத்தொகை 1,875 ரூபாயும் வழங்கப்படும்.

கோழிகள் 250 முதல் 500 வரை எண்ணிக்கை கொண்ட நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்கவும் மேற்படி மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தின் விவசாயிகள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். இவர்களிடம் கோழிப் பண்ணை அமைக்க போதிய நிலம், தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் அவசியம். கோழி வளர்ப்பில் முன்அனுபவம் உள்ளவர்களும், ஏற்கெனவே கொட்டகை அமைத்துள்ள பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும், கோழிப் பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், பயிற்சி மையங்களில் 5 நாள்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். மேற்கூறிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் கடிதத்துடன், அரசுடைமையாக்கப்பட்ட வங்கியிலிருந்து கடன் வழங்கும் ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கானச் சான்றுடன் விண்ணப்பங்களை, மதுரை மற்றும் திருமங்கலம் கோட்டத்தைச் சார்ந்த கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர்களிடம் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: 4375

Reply to This

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service