மரபணு மாற்றம் செய்யபட்ட கத்தரிக்காய்

கத்தரிகாயில் பூசிகள்  தாக்குதலை தடுப்பதற்காக செயற்கை முறையில் மரபணு மாற்றப்பட்டு நல்ல கத்தரிக்காய், சேதாரம்   இல்லாமல் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மரபணு மாற்றப்படுகிறது.. இது விஞ்ஞானிகள் கருத்து.. இது ஏற்புடையதா என்றால் இல்லை.. இல்லை.. இல்லை.. காரணம்..
  மனிதர்களுக்கு இயற்கையாகவே வயிற்றில் நாக்கு பூசிகள் தோன்றும்.. இதனை ஒன்று வராமல் தடுக்க வேண்டும் .. அல்லது வந்த பிறகு அதற்கு மருந்து உட்கொண்டு
அழிக்க வேண்டும்.. ஆனால் வயிற்றில் பூசிகள் வளைகிறது என்பதற்காக வயிற்றில் எப்போதும் அந்த பூச்சிகலை அழிக்க குடலில்  ஒரு வகை விஷத்தை உண்டு பண்ணுகிற மாதிரி நம் உடலில் மரபணு மாற்றம் செய்துகொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்..
இன்னொரு எடுத்துக்காட்டு.. பூச்சி தின்பதர்கே உகந்தது அல்ல என்னும் ஒரு விளை பொருளை மனிதன் உண்ணலாமா.. மரபணு மாற்றம்.. மனித வாழ்வின் துயரம்.. இயற்கை வளம் காப்போம்.. என்றும் நலமுடன் வாழ்வோம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து.. வக்கீல்.. சக்திராஜன்.

Views: 186

Replies to This Discussion

சக்திராஜன் அவர்களே,
உங்கள் வாதம் சரிதான், அனால் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட எடுத்துகாட்டு சரியானது அல்ல.
(தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்),

பருத்தியில் பூச்சி தாக்குதல் அதிகம், அதனால் பூசிகள் தாக்குதலை தடுப்பதற்காக செயற்கை முறையில் மரபணு மாற்றப்பட்டு பி.டி. பருத்தி வெளியிட்டனர். அனால் கத்தரிகாயில் பூச்சிகளால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை, தற்போது உள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் இந்த மரபணு மாற்றம் தேவையில்லை என்பதே என் வாதம்.
அதோடு, நாம் பருத்தியை உணவு பொருளாகவோ அல்லது வேறு ஏதானும் முறையிலோ நாம் உட்கொள்வது இல்லை. அனால் கத்திரிக்காய் நாம் நேரடியாக உணவாக பயன்படுத்துவதால், அதனை உண்பதால் வரும் பின்விளைவுகளை பற்றியும் யோசிக்க வேண்டியதாக உள்ளது.
ஆனாலும் நாம் உடனே இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று முடிவு எடுத்துவிட கூடாது. இதனை உண்பதால் வரும் பின்விளைவுகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த கோவிந்தராஜன், தற்போது புனேவில் இருந்து,
நன்றி திரு.கோவிந்தராஜன் அவர்களே.. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளைபொருள் நீண்ட காலத்திற்கு ஆய்வு செய்யப்படவேண்டும்.. முழுமையான பாதுக்கப்பானது என உறுதி செய்யட்டும்.. அதுவரை காத்திருப்போம்.. தீங்கு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுபேற்பது எனபது ஒரு புறம் இருக்கட்டும்.. அதனை anubavikka povathu appavi பொது makkal thaan.. வினையை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.. ஆராய்ச்சி முடிவுகள் முழுமையை வரட்டும்..
தங்களின் கருத்துக்கு நன்றி..

RSS

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2019   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service