இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த 

விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் 

விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று (டிசம்பர் 30 ) பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by டார்வின் on December 31, 2013 at 6:45am

எல்லா வகையிலும் பேரிழப்பாக கருதுகிறேன். விளைநிலங்கள் அழிக்கப்படும், உணவு பொருட்கள்  நஞ்சாக்கப்பட்டு வரும் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போராடிய குரல் ஓய்திருக்கிறது. அவர் நம்மை விட்டு போனதும் தான் தெரிகிறது அவரது வயதான தோற்றமும், அவர் முதியவர் என்றும். என் குடும்பத்தில் இருந்து எனக்கு பிரியமான நபர் ஒருவரை இழந்த உணர்வை உணர்கிறன். இந்த நாளை கண்ணீருடன் எதிர் நோக்குகின்றேன். எந்தவிதமான பரிட்சியம் இல்லாதிருந்தாலும் அவர் கூட இருக்கிறார் என்று என்னுள் நிலைத்திருந்த எனது எண்ணம் விலக மறுக்கிறது. இந்த நிலத்துக்கு அவர் தேவை இந்த நாட்டுக்கு அவர் கட்டாய தேவை. இயற்கை தாயே ஒரு நெல்மணியை உன்னிடம்  கொடுத்தால் நான்காக, பத்தாக தருவாய். இப்போது எங்கள் ஐயாவை எடுத்துச் சென்றிருக்கிறாய் என்ன செய்ய போகிறாய்.. உலகம் காணா உள்ளத்தால் உன்னை எதிர்பார்த்து நிற்கிறோம் எப்படி எங்கள் ஐயனை திருப்பி தர போகிறாய் என்று ? முதிர்ந்த கனி விழுந்ததாக நினைக்கவில்லை. பல விருட்சங்கள் வெளிவர இயற்கை எங்களை பதப்படுத்துகிறது என்ற எண்ணத் தோன்றுகிறது. நமக்கு தெரியாதிருந்தாலும் நிச்சயமாக நம்முள் எழுவார். எஙகள் இயற்கை தாயே கருணையுடன் உன்னை தலை வணங்குகின்றோம்.

Comment by N.S.E.MAHMOUD on December 30, 2013 at 11:38pm

நண்பர்களே! 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மரணம் என்ற செய்தியை அறிந்து மிகவும் கவலை அடைகிறேன்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சென்ற நவம்பர் மாதம் 12,13,மற்றும் 14 தேதிகளில் வானகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் முகாமுக்கு அடியேனும் சென்றிருந்தேன். இயற்கை விவசாயம், இயற்கை உணவு மற்றும் அல்லாது பொது அறிவு சம்பந்தமான பலவற்றையும் அந்த முகாமில் நாங்கள் பெற்றோம்.

இயற்கை வழியில் விவசாயம் செய்ய தன்னலமின்றி பல வகையிலும் நம் மக்களுக்காக பாடுபட்ட அந்த பெரியவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார் என்ற செய்தி இயற்கை விவசாயத்தை, இயற்கையான உணவை நேசிப்பவர்களுக்கெல்லாம் பேரிழப்புதான்.

என்ன செய்வது பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே! ஆக வேண்டும் என்ற இறைவனின் விதியை யாரால்தான் மாற்ற முடியும். எனவே இறைவனின் கட்டளைக்கு நாம் அனைவரும் தலை சாய்த்து , அந்த பெரியவரின் மரணத்தை பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோமாக.

அந்த பெரியவரின் நோக்கத்தை ,தியாகத்தை, கடமையை பின்பற்றி இயற்கை விவசாயத்தை மென்மேலும் பெருக உழைப்போமாக.  பெரியவர் நம்மாழ்வார் அவர்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுடைய நண்பர்கள் , சுற்றத்தார்கள் மற்றும் நம் அனைவருக்கும் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.

N.S.E.மஹ்மூது - காயல்பட்டணம்.  

Comment by Babu on December 30, 2013 at 10:52pm

Big............loss..................for all of us............

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service