அனைத்து வலைபதிவுகள் (990)

2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்!

2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்!

இ.கார்த்திகேயன்

இ.கார்த்திகேயன்

ஆர்.எம்.முத்துராஜ்

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள் எள்ளைச் சாப்பிட்டால் உடல் பெருக்கும். உடல் பெருத்தவர்கள் கொள்ளுவைச் சாப்பிட்டால் உடம்பு இளைக்கும் என்பதுதான் இந்தச் சொலவடையின் அர்த்தம். கடினமாக வேலை செய்பவர்கள் தினமும் உணவில்…

Continue

Added by Naveenkumar Thambidurai on November 5, 2017 at 5:30pm — No Comments

castor thresher machine

I want to purchase a castor threshing machine for my own
agricultural use. I have cultivated castor in 9 acres. Please inform
me where the castor thresher machine available ?

my contact no. 9443513107

Added by K.Periaswamy on October 30, 2017 at 3:36pm — No Comments

கால்நடை தீவனம் அசோலா

மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்க முக்கிய உயிரி உரமாக அசோலா உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசோலா என்பது விவசாயிகளின் நண்பன் எனக் கூறலாம். இந்த அசோலா மூலம் மண் வளத்தை அதிகரித்து அனைத்து வகைப் பயிரிலும் அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பெரும் பயனடைய முடியும்.

தற்போதைய கால கட்டத்தில் ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மிகவும் மாசுபட்டு வருகிறது.

மேலும், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும் பூச்சிகள் அழிவதுடன்… Continue

Added by அசோலா விதைகள் விற்பனை​ பசுந்தீவன on June 21, 2017 at 1:19pm — No Comments

அற்புத கால்நடை தீவனம் அசோலா

0

அற்புத கால்நடை தீவனம் அசோலா

by Article Team

செப் 22, 2012

ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய அசோலா என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும்.

செலவின்றி வளரும் அசோலாவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு மாட்டிற்கு ஒரு… Continue

Added by அசோலா விதைகள் விற்பனை​ பசுந்தீவன on June 3, 2017 at 3:56pm — No Comments

மாடித்தோட்டம் 'கிட்' ரெடி

டுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் 'கிட்' பெறலாம். மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம்.

இதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் கொடுக்க வேண்டும். மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றில் கத்தரி, வெண்டை, கீரை விதை பாக்கெட்டுகள், இயற்கை அடியுரமாக 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியம், 100…

Continue

Added by சக்தி on June 3, 2017 at 10:36am — 1 Comment

இப்கோ கிஸான் - மொபைல் தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை மேம்படுத்துதல்நம்ம நாட்டுல விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கு. அந்த வரிசையில் இந்த பகுதியில் நாம் படிக்க இருப்பது மொபைல் தொழில் நுட்பம். மொபைல் தொழில் நுட்பத்தை வைத்து விவசாய மேம்பாட்டை செய்யும் நிறுவனம் தான் நமது இப்கோ உழவர் தொலைதொடர்பு நிறுவனம்.

 

v  இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ (IFFCO) நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக…

Continue

Added by CHANDRALEKHA T on June 13, 2016 at 10:37am — No Comments

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கலாம்: வேளாண்துறை ஆலோசனை

தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்கலாம் என்று கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தற்போது குறுவைப் பருவ நெல் நாற்றுவிடுதல் மற்றும் நடவுப் பணியானது நடைபெறுகிறது. விவசாயிகள் இளம் நெல் நாற்றினை அரை அங்குல ஆழத்தின் மேலாக நடுவதன் மூலமாக கூடுதல் பயன் பெறலாம்.

 நாற்றினை மேலாக…

Continue

Added by சக்தி on June 8, 2016 at 7:21am — No Comments

அசோலா வதை எனக்கு தேவை

அசோலா விதை எஙகு கிடைக்கும்
9865722156

Added by babu on May 30, 2016 at 4:50pm — 1 Comment

மானாவாரி நிலங்களுக்கு வரப்பிரசாதம்... கடலை மகசூல் அமோகம்... விவசாயி சுகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, தென்னை ஆகியவை இவரின் முக்கிய விவசாயம். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டன. இதனால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள தனது வாழ்வு என்னாகும் என்ற கவலை சுகேந்திரனை தொற்றி…

Continue

Added by சக்தி on May 5, 2016 at 6:55pm — 1 Comment

மூலிகை சாகுபடிக்கு மானியம்

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு…

Continue

Added by சக்தி on ஜனவரி 23, 2016 at 7:41am — 1 Comment

கொத்தமல்லி கீரை வளர்க்கும் முறைகள்

நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் கீரைகளில் கொத்தமல்லி கீரையும் ஒன்று. சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.

வீட்டில் வளர்க்கலாம்

கொத்தமல்லியில் 2 வகை செடிகளை காணலாம். ஒரு வகையில் தண்டு பச்சையாகவும், பூ மென்மையாகவும் இருக்கும். மற்றொரு வகையில் தண்டும், பூவும் பழுப்பு நிறத்தில் காணப்படும். கொத்தமல்லி செடியின் காயே விதையாகும். இக்காயை உடைத்தால் அதனுள் விதை இருப்பதை காணலாம். இந்த…

Continue

Added by சக்தி on ஜனவரி 1, 2016 at 8:40am — No Comments

காய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூஞ்சாண கொல்லிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இயற்கையான முறையில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, புடல், பீர்க்கங்காய், அவரை ஆகிய பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

தங்கும் நஞ்சுகள்

காய்கறிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்த இடப்படும் பூஞ்சாண கொல்லிகள் காய்கறிகளில் தங்கிவிடும் போது அவை அவற்றை உண்போருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகி விடுகிறது. இதனால் ரசாயனங்களுக்கு பதிலாக இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு செய்ய வேண்டிய கட்டாயம்…

Continue

Added by சக்தி on ஜனவரி 1, 2016 at 8:39am — No Comments

கால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்

கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பசுந்தீவனம்

மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு…

Continue

Added by சக்தி on ஜனவரி 1, 2016 at 8:38am — 2 Comments

மழைப்பொழிவு, பனிமூட்டம் காரணமாக பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு மையம் அறிவுரை

மழைப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக, நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்த புழுக்கள், இலைகளை உள் பக்கமாக சுருட்டி, அதற்குள் இருந்தவாறு பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும்.

இலை சுருட்டுப்புழு

புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால் செடிகள் காய்ந்துவிடும். இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் போது, தழைச்சத்து உரங்களை வயலில்…

Continue

Added by சக்தி on ஜனவரி 1, 2016 at 8:36am — No Comments

முள்ளங்கி சாகுபடி முறைகள்

முள்ளங்கி காய்கறி பயிர் அனைத்து தரப்பு மண்வகையிலும் விரைந்து வளர்க்கக்கூடிய ஒரு காய்கறி பயிராகும். முள்ளங்கி சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். முள்ளங்கி ஒரு மருத்துவ குணம் நிறைந்த காய்கறியாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் காணப்படும் பில்லுரிமின் அளவை குறைத்து மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்தும். பித்த சுரப்பி ரத்தத்தில் கலப்பதை தடை செய்கிறது.

முள்ளங்கியின் இலை பொரியலாக செய்து உணவு பண்டங்கள் தயாரிக்கலாம். முள்ளங்கியில் நார்சத்து…

Continue

Added by சக்தி on ஜனவரி 1, 2016 at 8:30am — No Comments

ஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்

விவசாயிகள் நல்ல தரமான ஆட்டு பண்ணையை உருவாக்க பண்ணையில் சிறந்த பொலிகிடாக்களை பராமரிப்பது அவசியமானது.

தரமான ஆடுகள்

ஆட்டு பண்ணைகளின் லாபம் என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது. தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள்…

Continue

Added by சக்தி on December 31, 2015 at 8:41am — No Comments

பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி? -கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு

பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து, கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பருத்தி

பருத்தி பயிரில் காய்ப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து, புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். பயிரில் அதிக சேதம் தென்பட்டால் குளோர்பைரிபாஸ் மருந்து 800 மில்லி, பாசலோன் மருந்து 600 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.

இதேபோல் சாறு உறிஞ்சும்…

Continue

Added by சக்தி on December 31, 2015 at 8:03am — No Comments

மா மரங்களில் ஒட்டுக்கன்றுகளை தயாரிக்கும் முறை

மாமர வகைகளில் ஒட்டுக்கன்றுகள் உருவாக்கி பயிரிடுவதால் தாய் செடி குணம் மற்றும் ரகம் மாறாது. விரைவாக அதிக மகசூல் பெறலாம்.

மா விதை, பாலித்தீன் பைகள், எரு கலந்த மண் கலவை, கூர்மையான கத்தி ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவும்.

முதலில் பாலித்தீன் பையில் கூடுதல் தண்ணீர் வடிய 4…

Continue

Added by சக்தி on December 31, 2015 at 8:00am — No Comments

கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’

பால் உற்பத்தியில் உலகத்தில் முதலாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு, தீவனத்தினால் ஏற்படும் செலவே முக்கிய காரணமாகும். பால் உற்பத்தியில் தீவனத்தேவைக்காக 70 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. இதனால் தீவன செலவை குறைக்க, புதிய தீவனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்தவகையில் நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.…

Continue

Added by சக்தி on December 31, 2015 at 7:51am — No Comments

90 நாளில் பலன்தரும் பறங்கிக்காய்!

தோட்டக்கலைப் பயிர்களில் பறங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதன் தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.…

Continue

Added by சக்தி on December 31, 2015 at 7:30am — No Comments

Monthly Archives

2017

2016

2015

2014

2013

2012

2011

2010

2009

1999

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service