தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கலாம்: வேளாண்துறை ஆலோசனை

தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்கலாம் என்று கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தற்போது குறுவைப் பருவ நெல் நாற்றுவிடுதல் மற்றும் நடவுப் பணியானது நடைபெறுகிறது. விவசாயிகள் இளம் நெல் நாற்றினை அரை அங்குல ஆழத்தின் மேலாக நடுவதன் மூலமாக கூடுதல் பயன் பெறலாம்.

 நாற்றினை மேலாக நடுவதால் உடனடியாகப் புதியவேர் உருவாகி ஆரோக்கியமான வேராக வளரும். அதிக கதிர்விடும் தூர்களாகவும், நீளமான, வாளிப்பான கதிர்களாகவும் பெறமுடியும். இக்கதிரில் 200 முதல் 400 நெல் மணிகள் வரை பெற முடியும். மேலாக நடுவதால் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சியும், சீரான உரத்தேவையும் பயிர் பெற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நாள்களில் கதிர் முற்றும். இருமடங்கு மகசூல் பெறவும் முடியும்.

 நாற்றுக்களை ஆழமாக நடுவதால், நாற்றின் வேர் அழுகி தாமதமாக புதியவேர் உருவாகும். கதிர்கள் குறைவானதாகவும், குட்டையான, வளமற்ற கதிர்களாகவும் தோன்றும். கதிரில் 100 முதல் 200 வரை மட்டுமே நெல்மணிகளைப் பெறமுடியும். பூச்சி நோய்களுக்கு இடமளிக்கும். அதிக உரம் செலவாவதுடன் சராசாரி மகசூல் மட்டுமே பெற முடியும்.

 மேலான நடவுக்கு பவர் டில்லர், மினி டிராக்டர் போன்ற இலகு வாகனங்களை கொண்டு மேலாக சேடை உழவு செய்ய வேண்டும். 14 நாள் வயதுள்ள இளம் நாற்றுக்களை, சதுர முறையில் அரை அங்குல ஆழத்தில் நடுதல் வேண்டும். நடவு இயந்திரங்களை கொண்டும் மேலான நடவு செய்யலாம். மேலான நடவின் அவசியத்தை நடவு செய்யும் பெண்களுக்கு விவசாயிகள் கற்றுத் தருவது முக்கியமாகும்.

 தேவையான குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை-43, கோ-51, ஐ.ஆர்.50 மற்றும் ஏ.எ.டி-16 ஆகிய ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இயந்திர நடவு செய்ய இயலாத விவசாயிகள், நெல் விதைப்பு உருளைக் கருவி கொண்டு நன்கு சமப்படுத்தப்பட்ட வயலில் வரிசை விதைப்பு செய்யலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Views: 1756

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service