இப்கோ கிஸான் - மொபைல் தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை மேம்படுத்துதல்


நம்ம நாட்டுல விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கு. அந்த வரிசையில் இந்த பகுதியில் நாம் படிக்க இருப்பது மொபைல் தொழில் நுட்பம். மொபைல் தொழில் நுட்பத்தை வைத்து விவசாய மேம்பாட்டை செய்யும் நிறுவனம் தான் நமது இப்கோ உழவர் தொலைதொடர்பு நிறுவனம்.

 

v  இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ (IFFCO) நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது.

 

v  உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

 

 

v  இந்நிறுவனத்தின் கீழ் 16 துணை நிறுவனங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இப்கோ உழவர் தொலைதொடர்பு நிறுவனம்.  இந்நிறுவனத்தின்  மூலம் இரண்டு சேவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அவை.

1. இலவச வாய்வழி செய்தி:

விவசாய மக்களுக்கு, அவர்களுக்கு தேவையானா அனைத்து தகவல்களையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் ஆகும். இதற்காக ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளோம்.

v  தினமும் இரண்டு அல்லது மூன்று குரல் வழி செய்தியை வழங்குகிறோம். அவை பயிர் சாகுபடி / பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு ,மண் மேலாண்மை, விவசாய பொருட்களின் சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, அரசு திட்டங்கள், மானியங்கள், உடல்நலம், வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து  தகவல்களையும் முற்றிலும் இலவசமாக, வாழ்நாள் முழுவதும் வழங்குகின்றோம்.

v  கேட்க தவறிய செய்திகளை மீண்டும் கேட்பதற்கு 53435  என்ற எண்ணை அழைத்தால், திரும்ப செய்திகளை கேட்கலாம்.

v  விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்திகொள்ள 534351 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

v  கைப்பேசி அடிப்படையிலான வினாடி-வினா நிகழ்ச்சிகள் மற்றும் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

 

2.இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேசன்:     

"இப்கோ கிசான்" மொபைல் அப்ளிகேசன் பயன்பாடு கிராமிய மக்களை மேம்படுத்துவதற்காக  உருவாக்கப்பட்டது.


இதில் வானிலை, மண்டி விலை, சமீபத்திய விவசாய ஆலோசனை, எங்கள் நிபுணர் பகுதி, சிறந்த நடைமுறைகள் நூலகம், நிபுணர் ஆலோசனை, சமீபத்திய செய்தி மற்றும் இன்னும் பல வழங்குகிறது. இதில் உள்ள தகவல்களை , 11 இந்திய  மொழிகளில் குறிப்பாக தமிழ் மொழியில்  படிக்கும் வசதியிலும் மற்றும் குறைந்த படிப்பறிவு உள்ள மக்களின் வசதிக்காக ஆடியோ வசதியிலும் உள்ளது.


வேறு எந்த விவசாய அப்ளிகேசன்கலிலும் இல்லாத சிறப்பு என்னவெனில், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து பயிர் சாகுபடி பற்றிய தகவல்கள், வானிலை முன்னறிவிப்பு, மண்டி விலை, கால்நடை வளர்ப்பு, சந்தை,  சமீபத்திய செய்திகள், நிபுணர் பகுதி போன்ற அனைத்தும் ஒரே அப்ளிகேசனில் பெறலாம்.

இதில் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கவை

1).நிபுணர் பகுதி-சந்தேகங்களை நிபுணர்கள் குழுவுக்கு அனுப்ப முடியும். கேள்விகளை எழுத முடியாதவர்கள், பாதிக்கப்பட்ட பயிர்களை / பாதிக்கப்பட்ட கால்நடைகளை  புகைப்படம் எடுத்து அனுப்பலாம். நிபுணர்கள் இப்பிரச்சினையை ஆய்வு செய்து இதற்க்கான தனிப்பட்ட தீர்வை வழங்குவர்.

 

2)சந்தை பகுதியில் - விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை தங்கள் விரும்பிய விலையில் விற்கலாம். மற்றும் வாங்கலாம்.

கியான் பந்தர் – ஒரு பயிர் சாகுபடி பற்றி விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

வானிலை - ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டத்திற்கான, 5 நாட்கள் வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ளமுடியும். வானிலை முன்னறிவிப்பின் தகவலறிந்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மண்டி - ஒரே நேரத்தில், ஐந்து விளைபொருட்களின் விலையை ஐந்து  மண்டிகளில் இருந்து பெற முடியும். விவசாயிகள் சந்தை விலை நிலையை பொறுத்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான ஒரு முடிவை எடுக்க முடியும்.

செய்தி- கிராமப்புற இந்தியா, விவசாயம் தொடர்புடைய விஷயங்கள், சமூக நலம், வேலை வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள்  மற்றும் அரசு மானியங்கள் மற்றும் இன்னும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்ய - google play store -ல்  IFFCO KISAN  என்று டைப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், பின்பு மொழியை தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண், மாவட்டம், மாநிலத்தை குறிப்பிடுங்கள். Ref. Code-ல் 2201 என்று டைப் செய்யுங்கள். நன்றி

இப்கோ கிஸான் வழங்கும் இந்த சேவைகளை பெற விரும்பினாலோ அல்லது இதை பற்றின சந்தேகங்கள் இருந்தாலோ அணுக வேண்டிய  

தொலைபேசி எண் –  534351,  9791735144

 

 

 

 

 

 

 

 

 

Views: 3891

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service