மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்க முக்கிய உயிரி உரமாக அசோலா உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அசோலா என்பது விவசாயிகளின் நண்பன் எனக் கூறலாம். இந்த அசோலா மூலம் மண் வளத்தை அதிகரித்து அனைத்து வகைப் பயிரிலும் அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பெரும் பயனடைய முடியும்.
தற்போதைய கால கட்டத்தில் ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மிகவும் மாசுபட்டு வருகிறது.
மேலும், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்குத் துணை புரியும் நுண்ணுயிர்களும் அழிந்து விடுகின்றன.
இதுபோன்ற ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
ரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுகத் தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எனவே, விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம், உயிரி உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் அசோஸ்பைரில்லம், பாஸ்போக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிரி உரங்களைப் பயன்படுத்தி தங்களது நிலங்களை செழிப்பாக வைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்க முடியும்.
அசோலாவின் நன்மைகள்: மண்ணில் தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது. பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது. நாற்றங்கால் விடப்பட்ட 2 அல்லது 3 நாள்களில் இரு மடங்காகப் பெருகும்.
அசோலாவின் உற்பத்திப் பெருக்கமும் சுலபம். அசோலா புரதச் சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படும்.
நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள், கொசுக்களைக் கட்டுப் படுத்துகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிரி உரத்தைப் பயன்படுத்தலாம் என வேளாண் துறையினர் கூறுகின்றனர்.

Views: 78

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service