மா மரங்களில் ஒட்டுக்கன்றுகளை தயாரிக்கும் முறை

மாமர வகைகளில் ஒட்டுக்கன்றுகள் உருவாக்கி பயிரிடுவதால் தாய் செடி குணம் மற்றும் ரகம் மாறாது. விரைவாக அதிக மகசூல் பெறலாம்.

மா விதை, பாலித்தீன் பைகள், எரு கலந்த மண் கலவை, கூர்மையான கத்தி ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவும்.

முதலில் பாலித்தீன் பையில் கூடுதல் தண்ணீர் வடிய 4 ஒட்டைகள் போடவும்.பின் எரு கலந்த மண்ணை நிரப்பி நீர் ஊற்றவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை 2 நாட்கள் நீரில் அல்லது சாணம் கரைத்த நீரில் ஊற்றவும்.

ஊறிய விதைகளை பையில் ஊன்றவும்.செடி முளைத்த 30 நாட்களில் செடியின் மேல் பகுதியை மட்டமாக வெட்டவும்.அதே அளவு பருமன் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தாய், செடி கிளையை வெட்டி இலைகளை அப்புறப்படுத்தி வைக்கவும்.

பாலித்தீன் பையில் உள்ள மட்டமாக வெட்டப்பட்ட செடியின் தண்டு பகுதியை வி வடிவத்தில் பிசிறில்லாமல் மேலே வெட்டவும். இதில் சரியாக பொருந்தும் வகையில் ஆப்பு வடிவத்தில் தாய் செடி கிளையின் அடிப்பகுதியில் வெட்டவும்.

பின்னர் தாய் செடி கிளையை வேர் செடியில் பொருத்தி, பாலித்தீன் பட்டையால் இறுக கட்டவும்.பின்பு இன்னொரு பாலித்தீன் பையால் செடியின் மேல் பகுதி மற்றும் ஒட்டுப்பகுதியை மூடும் வண்ணம் மூடி அடியில் கட்டவும்.

ஒட்டு செடி அடுத்த 30 நாட்களில் தயாராகும். வேர் செடி தாய் செடி கிளைகளை கூர்மையான கத்தி மூலம் பிசிறில்லாமல் வெட்டுவது அவசியம்.

Views: 2002

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service