சென்ற ஆண்டில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டிட தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து தென்னை காப்பீட்டுத்திட்டம் தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது.

இதுவரை நம் மாவட்டத்தில் 202 விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்திட விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 81,700 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இதில் 27 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியுடையவர்களாக அறியப்பட்டு இதுவரை 14 விவசாயிகளுக்கு 1,17,140 ரூபாய் இழப்பீட்டுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 விவசாயிகளுக்கு பரிசிலனையில் உள்ளது.

இத்திட்டத்தின் படி 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மரம் ஒன்றுக்கு காப்பீட்டுத்தொகை ரூ 600/- இதற்கு செலுத்த வேண்டிய பிரிமியம் மரம் ஒன்றுக்கு ரூ 4.69 இதில் மானியம் போக விவசாயி செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ 1.06/- மட்டுமே.

16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டுத்தொகை ரூ 1,150 பிரிமியம் ரூ 6.35 மானியம் போக மரம் ஒன்றுக்கு விவசாயி செலுத்த வேண்டிய தொகை ரூ 1.44 மட்டுமே.

விவசாயி செலுத்தும் பிரிமியம், செலுத்திய மாதத்தின் அடுத்த மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கு மட்டுமே உரியதாகும். மீண்டும் காப்பீடு செய்திட மீண்டும் பிரிமியம் கட்டி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY