வேலூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பருத்தியில் நுனி கிள்ளி விடுவதன் மூலம் பக்க கிளைகள் உருவாகி அதிக திறட்சியான காய்கள் உருவாகும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பருத்தி சாகுபடி செய்து 75 முதல் 80-வது நாளில் 15-வது கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும். இதனால் அதிக பக்கக் கிளைகள் உருவாகும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பூக்களும், திறட்சியான காய்களும் உருவாகும். மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டி.ஏ.பி. கலந்து தெளிக்க வேண்டும். இலை வழி உரமாக டி.ஏ.பி. அளிப்பதால் அதிக எண்ணிக்கையிலான காய்கள் உருவாக வாய்ப்புள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY