இந்தியாவின் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வித்துப்பயிர்களில் எள்ளு, ஆமணக்கு ஆகியவை முக்கியமானவை. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, இராஜஸ்தான், ஒரிஷா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாமக்கல், சேலம்,ஈரோடு,கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அதிகளவிலும், பிற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆமணக்கு சுமார் 40090 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.


      மானாவாரியாக பயிரிடுவது, வளம் குன்றிய நிலங்களில் பயிரிடுவது கலப்பு மற்றும் ஊடுபயிராக சாகுபடி  செய்வது, நல்ல பராமரிப்பு செய்யாமை போன்றவையே ஆமணக்கு பயிர் சாகுபடி பரப்பளவு குறைவதற்கு முக்கிய காரணங்களாகும். தகுதியான வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்வதன் மூலம் ஆமணக்கு சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து, இலாபம் சம்பாதிக்கலாம். டிஎம்விஎச்1, ஓயஆர்சிஎச்1 போன்ற வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். ஆமணக்கு பயிர் சாகுபடி செய்ய அதிக வெப்பத்துடன் கூடிய குறைந்த ஈரப்பதம் இப்பயிரின் வளர்ச்சிக்கு உகந்ததாகும். கார, அமிலத்தன்மையற்ற செம்மண், வண்டல்மண் இப்பயிருக்கு ஏற்றது. இப்பயிர் சாகுபடி செய்யப்படும் நிலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆமணக்கு சாகுபடிக்கு சான்றளிக்கப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.


     

இரகங்கள், சாகுபடி முறை, மண்ணின் வளம், பயிரின் இடைவெளியை பொருத்து, விதையளவு மாறுபடும். இறவை வீரிய ஒட்டு ரகங்களுக்கு எக்டருக்கு 5 கிலோவும், மானாவாரிக்கு 7.5 கிலோவும் தேவைப்படும். ஆமணக்கு விதையை விதைப்பதற்கு முன், விதைகளை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். விதையை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


       மானாவாரிக்கு 120*90 சென்டிமீட்டர் என்ற அளவிலும், மானாவாரியில்120*120 செ.மீ என்ற அளவிலும் நடலாம். தேவைப்பட்டால் மண் வளத்திற்கு ஏற்றவாறு இடைவெளியை மாற்றிக் கொள்ளலாம். விதைத்த 10 முதல் 15 ஆவது நாள் 2 விதை முளைத்த இடத்தில் ஒன்றைக் களைந்து விட வேண்டும். முளைக்காத இடத்தில் மீண்டும் விதைத்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 12.5 டன் தொழு உரமும், 60:30:30 கிலோ தழைச்சத்தும், மணிச்சத்தும் சாம்பல் சத்தும் போன்ற உரங்களும் அளிக்க வேண்டும். இது தொழு உரமும், தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாகவும் இட வேண்டும். விதைத்த மூன்று நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் 800 மில்லி அல்லது பெண்டிமெதிலின்1300 மில்லி களைக்கொல்லியை தெளித்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 20 மற்றும் 40 நாட்களில் களை பறிக்க வேண்டும்.

      விதைத்தவுடன் ஒவ்வொரு முறையும், உயிர் தண்ணீருக்கு பின்பு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்ச வேண்டும். நீர், நிலத்தில் நீண்ட நாட்களுக்கு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயிரில் காணப்படும் பூச்சிகள், நோய்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். விதைத்த 90, 120, 150, 160 ஆவது நாட்களில் காய்குலைகளை அறுவடை செய்யலாம். காய்களை சூரிய ஒளியில் உலர்த்தி, பின் காயுடைப்பான் கருவியை கொண்டு உடைத்து முத்துக்களைச் சேகரிக்கலாம்

LEAVE A REPLY