தீவனச் சோளம் – கோ. 31 ரகம்

0
118

               இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு புதிய துறை 1976ம் ஆண்டு த.வே.ப.கழகத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த துறையின் மூலம் கம்பு நேப்பியா ஒட்டுப்புல் கோ. (சி.என்) 4, கினியா புல் கோ (ஜி.ஜி) 3, மறு நாம்பு தீவனச் சோளம் கோ (எப்எஸ்) 29 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது இந்த ஆண்டு தீவனச்சோளம் கோ.31 இரகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பயிரிட ஏற்ற இந்த இரகம் கோ.29 இரகத்தை விட 15 சதம் கூடுதல் தீவன விளைச்சலைத் தரும் இயல்புடையது.

அதிக எண்ணிக்கையில் தூர்கள், அகன்ற இலைகள், விதை உதிராத தன்மையுடன்

விரைவாக தழைக்கும் திறன், குறைந்த அளவு நச்சுப் பொருட்கள் (நார்ச்சத்து 19.8 சதம்), புரதம்

19.86 சதம் ஆகியவை இந்த இரகத்தின் சிறப்பியல்புகளாகும்.

 

கறவைமாடுகள், ஆடுகள் விரும்பும் சுவையுள்ள இந்த இரகம் 190 டன் முதல் 227 டன்

வரை பசுந்தீவன விளைச்சலைத் தரவல்லது. இதன் உலர் எடை விளைச்சல் 49.73 டன் ஆகும்.

இந்த இரகத்தை ஆண்டுக்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.

LEAVE A REPLY