எலுமிச்சையில் விழும் வேர் நூற்புழுவை தீர்க்கும் வழிகள்

0
7

தமிழ்நாட்டில் ஆரஞ்சு, எலுமிச்சை பயிரிடும் அனைத்து பகுதிகளிலும் காணப்படும்.

எலுமிச்சை வேர் நூற்புழுவால் விளைச்சல் சுமார் 50 சதம் வரை குறைகிறது.

மரங்களின் வளர்ச்சி குறையும்.

இலைகள் வெளிறிய மஞ்சள் நிறமாகியும் உள்நோக்கிச் சுருண்டும் இலைகளின் எண்ணிக்கை குறைந்தும், பழங்களின் எண்ணிக்கை குறைந்தும், சிறுத்தும் காணப்படுகின்றன.

நூற்புழு தாக்கிய மரத்தின் கிளைகள் உதிர்ந்து கிளைகள் மேலிருந்து கீழ் நோக்கி சாய்ந்து காணப்படும்.

இந்த நூற்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ், ப்ளூரசன்ஸ் எனும் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியா கலவையை மாதத்திற்கு 20 கிராம் வீதம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை மரத்தைச் சுற்றி 15 செ.மீ. ஆழத்தில் மரத்தில் இருந்து 50 செ.மீ. தூரத்தில் மணலுடன் கலந்து இட வேண்டும்.

LEAVE A REPLY