உளுந்து – மதுரை 1 ரகம் விளைச்சல் முறை

0
99

              தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் நோயைத்

தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6,

உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

விளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தை விட அதிக விளைச்சலைத்

தரும் மதுரை-1 இரகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய உளுந்து இரகம், எக்டருக்கு 700 கிலோ விளைச்சலைத் தரும்.

மேலும் உளுந்தின் மாவு பொங்கும் தன்மையைக் கொண்டது.

உளுந்து விதைத்த 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

மஞ்சள் தேமல் நோய், களப்புழு தாக்குதலைத் தாங்கி வளரும் இயல்புடையது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் தவிர)

பயிரிட ஏற்ற இந்த இரகம் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் சோதனை முறையில் பயிரிட்ட

போது எக்டருக்கு அதிக விளைச்சலாக 1679 கிலோ கொடுத்துள்ளது.

 

LEAVE A REPLY