முறையாக பால் கறக்கும் முறைகள்

0
59

                  பொதுவாக கறவை மாடுகளில் பால் கறப்பதற்கு அனைத்து விரல்களையும் பயன்படுத்தி

பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி

விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகியமுறைகளில் பால் கறக்கப்படுகிறது.

பிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும்முறை மிகவும் சிறந்ததாகும்.

இம்முறையில் பால்காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
மடிநோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதின் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும்.

பால் கறவைக்கு முன்னால் கறவையாளர்கள் தங்கள் இரு கைகளையும் சோப்பு கொண்டோ அல்லது கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டோ கழுவ வேண்டும்.

பால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் இயந்திர தயாரிப்பாளர்களின் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மடி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால்கறக்க கறவை இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட கால்நடைகளில் மடிகளில் வலி உண்டாவதுடன் பால் கறவை இயந்திரம் அசுத்தப்பட வாய்ப்புள்ளது.

கறவை மாடுகளில் தினசரி இரண்டு கறவைகளுக்கு இடையேயான இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.
பால்வற்றும் காலம்:

பால் வற்றும் காலம் என்பது சினையாக உள்ள பசுக்களில் எட்டுமாத காலத்தில் பால்

கறவையை நிறுத்தி அடுத்த கன்று பிறக்கும் வரை ஓய்வளிப்பதாகும்.

சினைப்பசுக்களுக்கு ஓய்வளிப்பதால் பிறக்கப்போகும் கன்று ஆரோக்கியமாக வளர்வதுடன்

அடுத்த கறவையில் பால் உற்பத்தி முறையாக இருக்கும்.

அதிக பால் கரக்கும் பசுக்களில் கறவையை நிறுத்தும் சமயத்தில் பால் கறவையை நிறுத்தக்கூடாது.

இவ்வாறு நிறுத்துவதால் பால் மடியில் பாதிப்புகள் ஏற்படும்.

எனவே இத்தகைய பசுக்களில் பால் கறவையை படிப்படியாக நிறுத்த வேண்டும்.

முதலில் சில நாட்கள் ஒருசேர கறவையை நிறுத்தும் சமயத்தில் அவற்றிற்கான தீவனத்தினைச் சற்று குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியை குறைக்க முடியும்.

ms

LEAVE A REPLY