நெல் நடவு இயந்திரம் – விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம்

0
0

நெல் நடவு இயந்திரம் குறித்து விவசாயிகளுக்கு வயலில் நேரடி செயல்விளக்க பயற்சி முகாம் கூட்டுறவுத் துறையால் நடத்தப்பட்டது.
விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயத் தொழில்நுட்பக் கருவிகளை குறைந்த வாடகையில் விட அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் சாகுபடியில் ஆள்களை வைத்து நடவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், ஆள்பற்றாக்குறை பிரச்னைகளால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நெல் நடவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகேயுள்ள கணபதிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் சி.ரமேஷ் என்பவரது எலந்தக்காட்டு தோட்ட வயலில், நெல் நடவு இயந்திர நேரடி செயல்விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
இதில் நெல் நடவு இயந்திர நிறுவனத்தின் பயிற்றுநர்கள் அன்பு, ரவி ஆகியோர் பங்கேற்று, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். நெல் நடவு முறைகள், இயந்திரத்தின் பயன்கள், நாற்று நடுதல் குறித்து அவர்கள் விளக்கினர்.
இதில் ஈரோடு சரக துணைப்பதிவாளர் ஜி.காந்திநாதன் பேசுகையில், வரும் ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும்.
அப்போது நெல் நடவு செய்ய இந்த இயந்திரம் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து கொண்டால், முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரம் வாடகைக்கு அளிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here