மாமரத்தில் தத்துப் பூச்சி தடுப்பு

0
0
வேலூர் மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, ஹிமாம்பசந்த், செந்தூரா, ருமானி, பெங்களூரா உள்ளிட்ட மாமரங்கள் பயிரிடப்பட்டு, தற்போது இம்மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இப்போதுள்ள பருவ சூழலில், சிறிய பழுப்பு நிறமுள்ள தத்துப் பூச்சிகள் பூக்கள் மற்றும் இளம் தளிர்களில் உள்ள சாறை உறிஞ்சி சேதப்படுத்த வாய்ப்புண்டு.
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த, 0.03 சதவீதம் அசாடிராக்டின் என்ற வேம்பு கலந்த தாவரப் பூச்சிகொல்லியை, தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து 7 நாள்களுக்கு ஒரு முறை, இரண்டு தடவை தெளிக்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி உரிய பூச்சிக்கொல்லியை மட்டுமே தெளிக்க வேண்டும். பரிந்துரை செய்யாத பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால், பூச்சிகளின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் அப்பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here