பசுவின் பால் பெருக்கும் வழிகள்

0
0

பசுவின் பால் பெருக்கும் வழிகள்:
தேவையான அளவு பசும்புல் தரவேண்டும். 
* வைக்கோலை பசுந்தீவனத்துடன் சேர்த்து தரலாம். 
* அதிகமாக உள்ள பாலைக் கறந்து பசுவிற்கே ஊட்டலாம். 
* ஒரு பங்கு வெல்லம் மற்றும் 3 பங்கு பார்லி கலந்து நன்கு பக்குவம் செய்து தரலாம். 
* பப்பாளிப்பழம் மற்றும் பப்பாளி இலையை வெல்லம் சேர்த்து தரவேண்டும். 
* இலுப்பைப்பூ, புல், வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் நனைத்துத் தரலாம். 
* கரும்புத்துண்டு, கருப்பஞ் சக்கையைத் தரலாம். 
* முட்டைக்கோஸ் கீரையைக் கொடுக்கலாம். 
* வில்வப் பழத்தை வேகவைத்துக் கொடுக்கலாம். 
* புரசு இலையையும் இலுப்பைப் பூவையும் தரலாம். 
* சுரைக்காய் மற்றும் இலை தருவதால் பால் பெருகும். 
* வெல்லத்தையும் கடுகையும் சேர்த்து தரலாம். 
* நன்றாக வேகவைக்கப்பட்ட மூங்கில் இலையுடன் உப்பு மற்றும் ஓமம் சேர்த்துத் தரலாம்.
* பால்பெருக்கி இலை தண்ணீர் விட்டான்கிழங்கு, அஸ்வகந்தா பால் பெருக்க உதவும்.
* ஜீரகம்-200 மி.கி., உப்பு -200 மி.கி., சோம்பு-200 மி.கி., லவங்கம்-80 மி.கி., வெண் கந்தகம்-40 மி.கி., படிகாரம்-40 மி.கி., பொட்டாசியம் நைட்ரேட்-40 மி.கி., என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தீவனத்துடன் ஒரு கைப்பிடி அளவைச் சேர்த்துக் கொடுப்பது பால் பெருக்கச் செய்யும்.
* கன்று ஈன்ற பசுவிற்கு ஈன்ற மூன்றாம் நாளில் உளுந்துக் குருணை 500கி, உப்பு-100கி, மஞ்சள்-50கி, திப்பிலி பொடி-50 கி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து அதில் கால் பங்கு வெல்லம் சேர்த்து இளம் சூட்டில் மாலை நேரத்தில் தருவதால் பால் நன்றாகப் பெருகும். 
* சினை மாடுகளுக்கு கன்று ஈன்றபிறகு பால் சுரக்காமல் மடி இறுகிப் போயிருக்கும். இதனால் கன்றுக்குத் தேவையான பால் கிடைக்காது. பசுவின் மடிக்காம்புகளை ஆமணக்கு இலையைச் சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் மடி இளகும்.
மாடு வளர்ப்பிற்கு அரசாங்க திட்டங்கள்:
அரசாங்க திட்டங்கள் பிராணிகள் நல வாரியம் என்கிற அமைப்பின் மூலம் மாடு வளர்ப் பிற்கு மானியங்கள் வழங்கப் படுகிறது. அதன் திட்டங்களின் முக்கியமான சந்தேகங்களும் அதற்கான பதில்களும் கீழே தரப் பட்டுள்ளன. மேலும் விரிவான விளக்கங்களுக்கு கீழே தரப் பட்டுள்ள முகவரியில் தொடர்புகொள்ளவும். “பிராணிகள் நல வாரியம், 13/1, மூன்றாவது சீவன்ட் ரோடு, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை-41. போன்: 044-2457 1024, 2457 1025. பேக்ஸ்: 044-2457 1016. வெப்சைட்: www.awbc.org 
email: awdimd3.vs nl.net.in.,
animalwelfareboard@gmail.com.
விபூதி:
இயற்கை சூழ்நிலையில் வளர்க்கப்படும் நம் நாட்டுப் பசுக்களின் சாணத்திலிருந்து மட்டுமே விபூதி தயாரிக்கப்பட வேண்டும். அவ்விபூதியே உண்மையானது. தற்போது விபூதி என்ற பெயரில் விற்கப்படும் வெண்பொடிகள் கருக்காய் உமிச்சாம்பல், டாலமைட், கல்மாவுப்பொடி மற்றும் பேப்பர் கழிவிலிருந்து தயாரிக்கப்படுபவை. இதனைப் பூசுவதும் உட்கொள்வதும் நல்லதல்ல.
பசு விபூதி தயாரிக்கும் முறை: சுத்தமான மண் இல்லாத சாணத்தை சேகரித்துக் கொள்ள வேண்டும். அதில் நாட்டு மாட்டுச்சிறுநீரைச் சேர்த்து நன்றாக பிசைந்து உள்ளங்கை அளவுக்கு சிறு சிறு வரட்டியாகத் தட்டிக்கொள்ள வேண்டும். அதை சிமென்ட் தரை அல்லது காட்டன் துணியில் 3 நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.
நன்கு காய்ந்தவுடன் தரையில் நெல் கருக்காயை 3 அங்கு உயரத்திற்கு பரப்பி அதன் மேல் வரட்டிகளைக் கோபுரம் போல் அடுக்க வேண்டும். பின் சூடத்தைக் கொளுத்தி தீமூட்ட வேண்டும். தொடர்ந்து 5 நாட்கள் புகைந்து தானாக அடங்கிவிடும். சாம்பலானது கட்டி கட்டியாக இருக்கும். அவற்றைத் தனியே எடுத்து கையால் தூளாக்கி பாலிஸ்டர் வேட்டியில் சலித்தால் விபூதி தயார்.
ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 2 கிலோ வரை விபூதி தயாரிக்கலாம். இதன் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.200/- ஆகும். தூய்மையான விபூதியைப் பூசுவதாலும் உட்கொள்வதாலும் தலைவலி, மூக்கடைப்பு, நீர்க்குத்தல், தூக்கமின்மை, வயிற்று நோய் மற்றும் தோல் நோய்கள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here