குளோன் முறையில் உருளைக்கிழங்கு நாற்றுகள் உற்பத்தி

0
0

இலைகளைக் கொண்டே அதன் செடிகளை உற்பத்தி செய்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் தற்போது உருளைக்கிழங்கு நாற்று உற்பத்தியிலும் புதுமை படைத்துள்ளது.பொதுவாக உருளைக்கிழங்கு சாகுபடி என்பது அதன் விதைக்கிழங்குகளை நட்டு, அவைகள் முளைக்கும்போது அனைத்து விதைகளுமே முளைக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் ஒரு ஏக்கருக்குத் தேவையான செடிகளை நாம் பராமரிக்க இயலாமல் போகும்போது, விளைச்சல் இழப்பு என்பது தவிர்க்க இயலாது. மேலும் விதைக்கிழங்குகளில் இருந்து உருவாகும் கிழங்குகளும் ஒரு தரத்தில் இல்லாமல் பல தரத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.


இந்த முறைக்கு மாற்றாக உள்ளதுதான் எங்களின் உருளைக்கிழங்கு குளோன் நாற்றுகள். நாற்றுகளாகவே நிலத்தில் நடப்படுவதால் ஒரு ஏக்கருக்குத் தேவையான எண்ணிக்கையில் நாற்றுகளைப் பராமரிப்பது எளிது. எனவே மகசூல் இழப்பு தவிர்க்கப்படுகிறது. தரமான கிழங்குகளில் இருந்து குளோன் முறையில் நாற்றுகளை உருவாக்குவதால், சாகுபடியில் பெறப்படும் கிழங்குகளும் தரமானதாகவே இருக்க வேண்டும் என்பதுதான் குளோன் தத்துவம். தற்போதைய முறையில் 4-5 விதமான தரங்களில் கிடைக்கும் கிழங்கு, குளோன் முறையில் உருவான நாற்றுகளில் இருந்து பெறப்படும் உருளைக்கிழங்கு ஒரு தரமாகவே இருக்கும் வாய்ப்பும் அதிகம். உருளைக்கிழங்கு விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த முறை தற்போது பரிசோதனை நிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here