மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி

0
0
உடல்ரீதியாக ஆரோக்கியமாகவும், நோயின்றியும் இருக்க நாம் பல வகையான உணவு வகைகளை உட்கொள்கிறோம். தாவர உணவுகளில் கீரை வகைகளும், பழ வகைகளும் முக்கியமானது ஆகும். இதில், உடலை நோயின்றி பாதுகாக்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன. இவை உடலுக்கு குறைந்த அளவிலேயே தேவைப்படுகின்றன. ஆனால், இந்த குறைந்த அளவை சரிவர உட்கொள்ளவிட்டால் உடலை பல நோய்கள்  தாக்குவதற்கு வழி ஏற்படும். மற்ற கீரை வகைகளில் பொதுவாக சத்துக்கள் மட்டுமே அதிகளவில் இருக்கும். ஆனால், மணத்தக்காளி கீரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான  சத்துக்கள்  நிறைந்திருப்பதோடு மட்டுமில்லாமல் பல மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. எனவே, சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில்  கீரை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

      மணத்தக்காளி கீரையில் புரதம்(5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகியன உள்ளன. மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின்(3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) முதலியன உள்ளன என ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

      மணத்தக்காளி கீரையில் உள்ள ஆல்கலாய்டும், சப்போனினும் வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றுப்புண் ஆகிய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் கால்சியம் எலும்பு நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

     ஆன்டி ஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள டயோஸ்ஜெனின் என்ற வேதிப்பொருள் இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மையுடையவையாக உள்ளது.

      மேலும் மருத்துவ ஆய்வுக்குறிப்பின்படி, வயிற்றுப்புண், வாய்ப்புண், இருமல், வலிப்பு நோ, காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் இக்கீரை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் எல்லா வயதினரும் விரும்பி உட்கொள்ளும் வகையில் சத்துக்கள், மருத்துவப் பண்புகள் மாறாத வகையில்  பதப்படுத்தி உடனடி உணவு வகைகளான சத்துமாவு மிக்ஸ், பருப்பு பொடி, மணத்தக்காளி, சாதப்பொடி, பிஸ்கட், சட்னி மிக்ஸ், நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை தொழில் ரீதியாக செய்வதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

       சுமார் 5 கிராம் உலர்ந்த மணத்தக்காளி  கீரைப்பொடி சேர்க்கப்பட்ட இவ்வுணவுகளை உட்கொள்ளும்போது சுமார்50 கிராம் கீரை உண்ட்தற்கான சமமான சத்துக்கள் கிடைக்கும். இவ்வுணவு வகைகளை தொழில்ரீதியாக  செய்ய மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உண்வு பதப்படுத்தும் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மணத்தக்காளியை பயிரிட்டு பயன்பெறலாம்.

thanks to dinakaran
            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here